எத்தனை அழகான முகம் என்றாலும் அந்த முகத்திற்கு வசீகரத்தை தருவது முடி தான். குடும்ப பாரம்பரியம் காரணமாக சிலருக்கு இயல்பாகவே அழகான முடி வாய்ப்பது உண்டு.

சிலர் முறையான பராமரிப்பால் அழகிய கூந்தல் பெறுவது உண்டு. ஒரு சுழற்சி போன்று கூந்தல் வளர்வதும் உதிர்வதும் நடந்து கொண்டே இருக்கும். உதிர்வது அதிகரிக்கும் போது தான் நாம் பதறுகிறோம். என்னென்ன காரணங்களால் முடி உதிரும் என்று தெரிந்தால் அதனை நிவர்த்தி செய்ய வசதி என்பதால் அதனை தெரிந்து கொள்வோம்.
நோய்களால் மற்றும் அதற்கான சிகிச்சைகளால் முடி உதிர்வது:

டைபாய்டு , புற்றுநோய் , மன அழுத்தம் என இன்னபிற காரணங்களால் தலைமுடி உதிர்வது உண்டு.இந்த வகையில் முடி உதிர்வது தற்காலிகமே.பரிட்சை நேரத்தில் கூட பிள்ளைகளுக்கு முடி உதிர்வது உண்டு.
கர்ப்ப காலத்தில் முடி உதிர்தல்:
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது தலைமுடி உதிர்வதில்லை. ஆனால் குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து அவளது முடி உதிர்வதை உணர முடியும். இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும்.முறையான பராமரிப்பு மற்றும் சரிவிகித உணவுகள் உண்பது தான் இதற்கு ஒரே தீர்வு.
தலைக்கு குளிக்க உதவும் தண்ணீர்:
அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பது , சுடுநீரில் குளிப்பது , குளோரின் நிறைந்த தண்ணீர், தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலைமுடி உதிரலாம்.
வைட்டமின் குறைபாட்டால் தலைமுடி உதிரும்:
உடலுக்கு தேவையான சரியான அளவு வைட்டமின் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்கள் இல்லாவிட்டால் கூட முடி உதிரலாம்.
தலைமுடி சுத்தமின்மை:
தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம். தினமும் தலைக்கு குளித்து தலையில் பேன், பொடுகு, சிக்கு இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தூக்கமின்மையினால் தலைமுடி உதிரும்:
தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அவசியம். தூக்கம் குறையும் போது தலைமுடி உதிர ஆரம்பிக்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






