பருவ வயது பெண்களுக்கு வரும் முகப்பரு பிரச்னைணைகளுக்கான தீர்வு ..!!

பருவ வயதில், பெண் இருபாலருக்கும் வரும் தலையாய பிரச்சனை முகப்பரு.பளபளவென்று மாசு மருவற்ற முகத்திற்கு ஆசைப்படாதவர் யாரும் இல்லை.பருக்கள் சீழ் வைத்து அதனால் வரும் வடுக்கள் முகத்தின் அழகை கெடுக்கிறது.பருவை நினைத்து அனாவசிய கவலை வேண்டாம்.சாய் பல்லவி அதாங்க மலர் டீச்சரை சிவந்த பருக்கள் முக்த்தில் இருந்தும் , மலர் டீச்சரை அனைவரும் ரசித்தனர்.

Young woman squeezing pimple on her cheek on white background

பருக்கள் தோன்றுதல்

முகத்தில் உள்ள வியர்வை துளைகளில் இறந்த செல்களும் , எண்ணெய் சுரப்பிகளும் அடைத்துக் கொள்வதால் , சிறு கட்டிகள் தோன்றுகிறது. இதனைத்தான் பருக்கள் என்கிறோம்.

பருக்கள் முகம் முழுவதும் , கழுத்தில் , முதுகில் , மார்பு வரை தோன்றுகிறது.பருக்கள் தோன்றி சிவந்து , பிறகு வெள்ளை நிறமாக வறண்டு விழுந்து விடும்.பெரும்பாலும் இவை தழும்புகளை விட்டு செல்வதில்லை. பருக்களை கிள்ளும் போது தான் கிருமித் தொற்று ஏற்பட்டு சீழ் வைத்து முகத்தில் உள்ள மயிர்க்கால்கள் கூட அடைத்து கொள்கிறது.சிலருக்கு கடும் வலியும் , காய்ச்சலும் ஏற்படும்.நாளடைவில் இவை தழும்புகளாக மாறிவிடும். பருக்கள் முகம் முழுவதும் பரவி விடுகிறது.

பருக்கள் வரக்காரணம்

மரபுவழி, மன அழுத்தம், கொழுப்பு மிக்க உணவுகள், ஹார்மோன்கள் குளறுபடி, நோய் தொற்று .

பருக்கள் மற்றும் தழும்புகள் மறைய

1 டீஸ்பூன் பட்டை பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன் குழைத்து கொள்ளவும் . முகத்தை கழுவி துடைத்து விட்டு இந்த கலவையை போடவும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.தேன் மற்றும் பட்டையில் (cinnamon) உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் (antioxidants) Antibacterial , antiseptic properties இருப்பதால் பருக்கள் மறைந்து விடும்.

*எலுமிச்சை சாறை எடுத்து அதனை பஞ்சை நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும். எரிச்சல் ஏற்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

*சந்தனம் மற்றும் பன்னீர் கலந்து  செய்த கலவையை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணி நேரம் கழித்து பிறகு முகத்தை கழுவவும்.

* சோற்றுக் கற்றாழை உள்ளில் உள்ள பளிங்கு போன்ற சதைப்பகுதியை நீரில் கழுவி பிறகு மிக்ஸியில் அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் குறையும்.

*பால் சார்ந்த உணவுகள் தவிர்த்தல், கொழுப்பு உணவுகளை குறைத்து பச்சைக் காய்கறிகள், பழங்கள் நிறைய உண்ணவேண்டும்.தினசரி உடற்பயிற்சி, மன அமைதி , நிறைய தண்ணீர் குடிக்கவும் மொத்தத்தில் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கவும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas