மாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா?

இன்றைய அவசர யுகத்தில் வேலை பரபரப்பில் நேரம் இல்லையென்று உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்துவது கிடையாது. விளைவு இளம் வயதிலேயே இதயக்கோளாறுகள் அதன் விளைவாக மாரடைப்பு அதிலும் திங்கட்கிழமை பரபரப்பால் மாரடைப்பு விகிதம் அன்று மட்டும் அதிகம் என்று ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இடைவிடாத உடற்பயிற்சி மூலம் எப்படி இதயக்கோளாறுகளை தள்ளிப் போடலாம் என்று பார்ப்போம்.

ஹார்வர்டு பல்கலைகழகத்தில் 1916ம் ஆண்டு முதல் 1960 வரை படித்த மாணவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வே அனுப்பி ஆய்வு நடத்தியுள்ளனர். 1993 வரை அவர்கள் வாழ்க்கையை வாழும் முறையை குறிப்பாக அவர்கள் செய்யும் அன்றாட வேலைகள், அவர்களின் மரணவிகிதம், மாரடைப்பு விகிதம் ஆகியவைப்பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

ஆராய்ச்சி முடிவுகள்:

அன்றாடம் வீடு மற்றும் அலுவலகம் மாடியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைகிறது.

முதல் மாரடைப்பு வரும் ரிஸ்க்: 

தினம் 50 படிகளாவது ஏறுபவர்களுக்கு தினம் 50 படிகளை ஏறாதவர்களை விட 25% குறைவு. 50 படிகள் என்பது தோராயமாக தினம் ஐந்து மாடி அல்லது பத்து படிகள் கொண்ட மாடியை ஐந்து முறை ஏறி இறங்குவதற்கு சமம்.

உடற்பயிற்சி செய்பவர்கள்:

இடைவிடாத உடற்பயிற்சி மூலம் உடலில் உள்ள ஆற்றலை செலவழிப்பவர்களும் இதயநோய்களில் இருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.

வாரம் 2000 கலோரிகளுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் எரிப்பவர்களின் ரிஸ்க் விகிதம் , வாரம் 2000 கலோரிகளுக்கு குறைவாக உடல்பயிற்சியில் எரிப்பவர்களது ரிஸ்கை விட தோராயமாக 50% அளவு குறைவு.

நடைப்பயிற்சி செய்பவர்கள்:

குத்து மதிப்பாக 1.6 கி.மீ நடந்தால் 100 கலோரி எரியும். ஆக 2000 கலோரிகளை எரிக்க வாரம் 32 கி.மீ நடக்கவேண்டும். நாள் ஒன்றுக்கு 5 கி.மீ குறைந்தபட்சம் நான்கு நாட்கள்  நடைபயிற்சி செய்தால் கூட போதும்.வாரம் ஒரு நாள், இரு நாள் லீவ் எடுத்தாலும் இந்த 32 கி.மீ தூரம் நடக்க வேண்டும் என்பதை விட வேண்டாம்.

ஆதலால் அனைவரும் வாரம் தோறும் கட்டாயம் முடிக்க வேண்டிய இலக்குகள்!

*வாரம் 32 கி.மீ நடை

*தினம் ஐந்து மாடி ஏறுதல்

இது இரண்டையும் செய்துவந்தால் எக்ஸ்ட்ரா ஆரோக்கியம் உறுதி. இது இரண்டையும் செய்யாமல் இருப்பவர்கள் உடனடியாக செல்போனில் Pacer app.ஏதாவது ஒன்றை தரவிறக்கிக்கொண்டு தினம் குறைந்தது 5 கி.மீ நடக்க துவங்கவும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top