மாநிறத்தை கொண்டிருக்கும் பெண்கள் தங்கள் நிறத்தை மேலும் பிரகாசமாகவும் வைத்திருக்க விரும்புவார்கள். தற்போது கோடைக்காலம் என்பதால் சருமத்தை பராமரிப்பதில் சிரமம் இருக்கும். அதோடு முகத்தின் நிறத்தையும் மீட்டெடுப்பது சவாலானதாக இருக்கும்.
சரும நிறத்தை மேம்படுத்தும் தயாரிப்புகள் வெளியில் கிடைக்கும் என்றாலும் அது நம் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களால் ஏற்றப்படுகின்றன. எளிதாக கிடைக்க கூடிய பல பொருள்களை கொண்டு எளிதாக சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க செய்யலாம். அப்படியான ஃபேஸ் பேக் குறித்து பார்க்கலாம்.
பப்பாளி முட்டையின் வெள்ளைக்கரு மாஸ்க்
இந்த ஃபேஸ் பேக் கருமையான சருமத்தையும் ஒளிர செய்கிறது. சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
பப்பாளி சாறு – 2 டீஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்
முட்டையின் வெள்ளைக்கரு
பாதாம் எண்ணெய்/ ஆலிவ் எண்ணெய்/ சுத்தமான தேங்காய் எண்ணெய் – கால் டீஸ்பூன்
சருமம் வறண்டு இருந்தால் கிளிசரின் சேர்க்கலாம்
பப்பாளி துண்டை எடுத்து மசிக்கவும். அதில் தயிர் ஆப்பிள் சீடர் வினிகர், பாதாம் எண்ணெய் என ஏதாவது ஒன்றை எடுத்து நன்றாக கலந்து முட்டையின் வெள்ளைக்கருவை சேர்க்கவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்குள் ஊறவிடவும். பிறகு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.
பப்பாளி தோல் ஒளிர செய்கிறது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. முகத்தில் கறைகளுக்கு எதிராக போராடுகிறது. தயிர் முகத்தை சுத்தப்படுத்தக்கூடும். இது சரும பிரச்சனைகளுக்கு எதிராக போராடுகிறது. முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை பாதுகாக்கிறது.
கடலைமாவு உடன் எலுமிச்சை சாறு
கருமையான சருமத்தை கொண்டிருந்தால் இந்த பேக் மிகவும் உதவும்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
மஞ்சள் – கால் டீஸ்பூன்
பன்னீர் – சிறிதளவு
அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். அதை உலரவிட்டு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். கடலை மாவு முகத்துக்கு நல்ல க்ளென்சர் மற்றும் எக்ஸ்போலியேட்டர் ஆகும். அதே நேரத்தில் எலுமிச்சை சாறு சரும நிறத்தை மீட்டெடுக்க செய்கிறது. பன்னீர் இயற்கை டோனராகும். மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் என்பதால் இது தோல் பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
தேனுடன் எலுமிச்சை சாறு
தேவையான பொருட்கள்:
தேன் – 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து பேஸ்ட் பதத்துக்கு குழைத்து எடுக்கவும். 15 – 20 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் குழைத்து எடுக்கவும்.
தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு மூலப்பொருள். இது கறைகள் வடுக்கள் மற்றும் சருமம் இழந்த நிறத்தை மீட்டெடுக்கிறது.
பாலுடன் எலுமிச்சை சாறு
கருமையான சருமத்துக்கு செய்யக்கூடிய ஃபேஸ் பேக் வகையில் இது எளிமையானது. பலன் தரக்கூடியது.
தேவையான பொருட்கள்:
காய்ச்சாத பால் – 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிட்டிகை .
தேன் – கால் டீஸ்பூன்
இவை அனைத்தையும் நன்றாக கலந்து பேஸ்ட் பதத்துக்கு குழைத்து விடவும். இது உலரவிட்டு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். பால் சருமத்தை சுத்தம் செய்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க செய்யும். சருமத்தின் நிறத்தின் மேம்படுத்தும்.
தக்காளி மற்றும் தேன்
தேவையான பொருட்கள்:
தக்காளி – 1
தேன் – 2 டீஸ்பூன்
தக்காளி நன்றாக பழமாக இருக்கட்டும். இதை மசித்து இதில் தேன் கலந்து விடவும். இதை முகம் மற்றும் கழுத்து மூழுக்க தடவி விடவும். இதை முகம் முழுவதும் தடவி 20 முதல் 30 ந்மிடங்கள் வரை தடவி விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். இதை தொடர்ந்து செய்யும் போது மாநிறமான முகம் பளிச்சிடும்.
சருமம் மாநிறமாக இருந்தால் தக்காளியின் ஒளிரும் பண்புகள் தோல் சருமத்தை மேம்படுத்தும். இதை தொடர்ந்து தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் சருமம் அதிசயமாக ஜொலிப்பதை பார்க்கலாம்.
பால் பவுடருடன் எலுமிச்சை சாறு
சருமம் மாநிறமாக இருப்பவர்களுக்கு ஏற்ற பேக் இது.
தேவையான பொருட்கள்:
பால் பவுடர்- 2 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் / ஆலிவ் எண்ணெய்- அரை டீஸ்பூன்
எலுமிச்சை – 1 டீஸ்பூன்
தேன் 1 டீஸ்பூன்
பால் பவுடரில் அனைத்தையும் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி விடவும். இதை 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு மந்தமான நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். இதை காம்பினேஷன் ஸ்கின் இருப்பவர்களும் செய்யலாம்.
சருமத்திற்கு ஏற்ற சிறந்த எண்ணெய் இது. இதை தவறாமல் பயன்படுத்துவதால் சருமம் ஒளிரக்கூடும். முகப்பருவை குறைக்கவும் இந்த பேக் உதவுகிறது. வறண்ட சருமத்துக்கான ஃபேஸ் பேக் இது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News