தை பிறந்த உடன் சிறிது சிறிதாக குளிர் காலம் நீங்கி கோடை காலம் நோக்கி செல்லும் சூழல் ஏற்படுகிறது. கோடை காலங்களில் எப்போதும் உடலில் நீர்ச்சத்து இருப்பதும், உடல் குளிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியம். ஆனால் அதற்கு சாத்தியமில்லை.நீர்ச்சத்து பெற நமக்கு பல இயற்கை உணவுகள் உதவுகின்றன. அதில் ஒன்று தான் “தர்பூசணி” பழம். இந்த தர்பூசணி பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீரச்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறச் செய்யும்.
உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது…

உடலின் ரத்தஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். எனவே கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்ச்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு உண்டாகிறது. கோடை காலங்களில் கிடைக்கின்ற சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது.
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது..

நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்ச்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கிறது.
முக்கிய சத்துக்கள் இருக்கிறது…

நாம் நம் உடலில் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும். இவை அனைத்தும் அவ்வப்போது நாம் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கின்றன.
இதயத்திற்கு நல்லது..

நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை இக்காலகட்டங்களில் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துகள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும். தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க தர்பூசணி பழம் உதவுகிறது.நாள்தோறும் காலையில் தர்பூசணி பழங்கள் சாப்பிட்டு வர உடல் சீக்கிரமாக எடை குறையும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






