சில் சில் மாங்காய் சர்பத்!!

Mango Sarbath recipe

இந்தியாவின் வேதங்களில் மா பற்றிய குறிப்புகள் அதை கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. மேங்கோ(Mango) என்ற ஆங்கிலப் பெயர் ‘மாங்காய்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும். மேலும் மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும்.

எல்லா கனிகளையும் போல மாங்காயில் விட்டமின் ஏ உட்பட உடலுக்கு தேவையான 20 வகை சத்துக்கள் உள்ளன. மாங்காய் பலவித கூட்டு, ஊறுகாய், பச்சடிகளில் பயன்படுத்தப்படுகிறது.

“மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊறுகாய் ஊட்டும்”, என்ற சொலவடை கூறும் மாங்காயின் முக்கியத்துவம்.

மாம்பழ மில்க் ஷேக், மாம்பழ லஸ்ஸி, மாம்பழ பிர்ணி, மாம்பழ பாயாசம் என்று பழுத்த பழத்தை கொண்டு பலவிதமான ரெசிபிகள் உண்டு. மாங்காய் கொண்டு செய்யும் ஒரு வகை சர்பத் பற்றி பார்ப்போம்.

முதல்முறையாக வித்யாசமான “ஆம் கா பன்னா “, என்ற வட இந்திய பானத்தைப்பற்றி பார்ப்போம்.

Preparation time : 25 minutes
Category : juice

மாங்காய் சர்பத்

Yummy Mango Juice Recipe

தேவையான பொருட்கள் :
மாங்காய் – 2
சர்க்கரை – தேவையான அளவு
உப்பு
சீரகத்தூள் – 1ஸ்பூன்

செய்முறை :
1. நன்கு விளைந்த மாங்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

2. மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

3. வடிகட்டிய மாங்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

4. மாங்காய் வெந்து வரும் போது சீரகத்தூள் , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இறக்கவும்.

5. ஒரு கரண்டி மாங்காய் பாகு உடன் ஐஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சில்லென்ற மாங்காய் சர்பத் வித்தியாசமான சுவையில் கோடைக்கால விருந்தாக இருக்கும்.


Mango is a juicy stone fruit. The word “Mango” is derived from tamil name “maangaai”. It is one of the fruits in “mukkani”. Mango provides several nutrients including Vitamin A. Ripe mangoes are used to prepare mango milk shake, mango lassi, payasam and much more. With very few ingredients, it is possible to make yummy mango juice. Follow the step by step instructions to prepare a healthy mango juice recipe.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women