சொரியாடிக் கீல்வாதம் இருப்பவர்கள் என்ன உணவுகளை உட்கொள்ள  வேண்டும்? என்ன  உட்கொள்ள கூடாது?

சொரியாடிக் கீல்வாதம் உள்ளவர்கள் நாள்பட்ட அழற்சியை கட்டுப்படுத்த பழங்கள், காய்கறிகள், மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். சில உணவுகளை அதே நேரத்தில் தவிர்க்கவும் வேண்டும். எனவே எந்த மாதிரியான உணவுகள் நல்லது எவற்றை அவர்கள் தவிர்க்க வேண்டும் என பார்ப்போம்.

சொரியாசிஸ் எனப்படுவது  நாள்பட்ட தோல் நோயின் நிலை ஆகும். இதில் தோல்கள் உரிந்து சிவந்து போய் செதில் செதிலாக காணப்படும். இது ஒரு நாள்பட்ட அழற்சி தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலை ஆகும். இதில் சொரியாடிக் கீல்வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறிக்கிறது. இதில் பாதிப்படைந்த மூட்டுகள் வீக்கமடைந்து அழற்சியை ஏற்படுத்தும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான செல்கள் மற்றும் திசுக்களை தாக்கும்போது சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் ஏற்படுகிறது. மூட்டு வலி, வீக்கம் மற்றும் விறைப்பு ஆகியவை சொரியாடிக் ஆர்த்ரிடிஸின் முக்கிய அறிகுறிகளாகும்.

சிகிச்சை என்ன?

எந்த சிகிச்சையும் சொரியாடிக் ஆர்த்ரிடிஸுக்கு  இல்லை என்றாலும், ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், நோயை மாற்றியமைக்கும் ஆண்டிஹீமாடிக் மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் மூட்டு வீக்கத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து சிகிச்சையுடன்,வீக்கத்தை சில உணவு மாற்றங்களைச் செய்து கட்டுப்படுத்தவும்,எலும்பு மூட்டு நிபுணர்கள் உங்கள் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும் என்கிறார்கள். ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்வது தடிப்புத் தோல் அழற்சியை நிர்வகிக்க உதவும் என்று ஆராய்ச்சி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே சொரியாடிக் கீல்வாதம் இருப்பவர்கள் இந்த கட்டுரையில்  எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என அறிந்து கொள்வோம்.

​சொரியாடிக் கீல்வாதம் அறிகுறிகள்

 • தசைகளில் வலி உண்டாதல்
 • வீக்கம் மற்றும் கடினமான மூட்டுகள் தோன்றுதல்
 • சருமத்தின் மீது செதில் செதிலாக தோன்றுதல்
 • விரல்கள், கணுக்கால்களில் வீக்கம் உண்டாதல்
 • சொரியாடிக் கீல்வாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

மூட்டு வலிக்கு முக்கிய காரணமாக அழற்சியானது அமைவதால் அழற்சி எதிர்ப்பு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை எடுத்துக்கொள்வது உங்க வீக்கத்தை குறைக்கும். ஏனெனில் ஒமேகா 3 கொழுப்புகள் ஒரு வகை பாலி அன் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இவை சொரியாடிக் கீல்வாத நோயின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. 24 வாரங்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமில மாத்திரைகளை பெற்ற சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் கொண்ட நபர்கள் நோய் செயல்பாடு, மூட்டு சிவத்தல் மற்றும் மென்மை ஆகிய அறிகுறிகளில் குறைவை பெறுகின்றனர் என்று ஆய்வு காட்டுகிறது.

​ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளின் பட்டியல்

 • சால்மன் மற்றும் டூனா போன்ற கொழுப்பு மீன்கள்
 • வால்நட்ஸ்
 • ஆளி விதைகள்
 • சியா விதைகள்
 • சணல் விதைகள்
 • ஆல்கா மற்றும் கடற் பாசிகள்

​உயர் நார்ச்சத்து முழு தானியங்கள்

சொரியாடிக் நோய் மற்றும் உடல் வளர் சதை ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு உள்ளது . எனவே இந்நோய் இருப்பவர்கள் எடையை நிர்வகிக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

 

 • முழு தானிய ஓட்ஸ்
 • முழு தானிய கோதுமை
 • குயினோவா
 • பிரவுன் ரைஸ்
 • காட்டு அரிசி
 • மக்காச்சோளம்

ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகள்

ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துடன் தொடர்புடைய சேதத்தைத் தடுப்பதன் மூலம் நாள்பட்ட அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகளின் பட்டியல்

 • அடர் பச்சை இலை காய்கறிகள்
 • பிரஷ்ஷான பழங்கள்
 • நட்ஸ் வகைகள்
 • டார்க் சாக்லேட்
 • உலர்ந்த மசாலாக்கள்
 • தேநீர் மற்றும் காபி வகைகள்

 

சொரியாடிக் கீல்வாதத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்:

சிவப்பு இறைச்சி

நீங்கள் சிவப்பு இறைச்சியை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் வீக்கம், எடை அதிகரிப்பு மற்றும் தடிப்பு தோல் அழற்சி அறிகுறிகளை பெறுவீர்கள். எனவே நீங்கள் போதுமான புரதச் சத்தை எடுக்க சிவப்பு இறைச்சியை தவிர்த்து கோழி, மீன், நட்ஸ் வகைகள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட்டு வரலாம். ஏனெனில் அவை புரதங்களின் நல்ல ஆதாரமாகும். இவை உங்க தடிப்புத் தோல் அழற்சியை நிர்வகிக்க உதவுகிறது.

​பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் தடிப்புத் தோல் அழற்சியை தூண்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே முடிந்த வரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பால் பொருட்கள்

 உங்களுக்கு பால் பொருட்களும் அழற்சியை ஏற்படுத்தக் கூடியது. அதே மாதிரி சர்க்கரை உணவுகள், ஆல்கஹால், மிட்டாய்கள் மற்றும் ப்ரைடு உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சொரியாடிக் கீல்வாதம் பிரச்சினை இருப்பவர்கள் கீழ்க்கண்ட டயட் முறைகளை பின்பற்றி வரலாம். அந்த உணவுக்காளால் உங்க தடிப்புத் தோல் அழற்சியை மேம்படுத்தி வர உதவுகிறது.

பேலியோ டயட்

பேலியோ உணவு பொருட்களை  கேவ்மேன் உணவு என்றும் அழைக்கப்படுகிறது. பேலியோ உணவில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் ஆகியவற்றை இது விளக்குகிறது. தேசிய சொரியாசிஸ் அறக்கட்டளையின் கூற்றுப்படி, சில உணவுகள் பேலியோ உணவு உள்ளிட்ட  எடை நிர்வாகத்திற்கு உதவக்கூடும் மற்றும் தடிப்புத் தோல் அழற்சி அறிகுறிகளை மேம்படுத்த உதவும்.

மத்திய தரைக்கடல் உணவுகள்

​மத்திய தரைக்கடல் உணவுகள் என்பது பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகளை உட்கொள்ள வலியுறுத்தப்படுகிறது. இந்த டயட் சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கிறது.புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் , முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.

​அழற்சி எதிர்ப்பு டயட்

அழற்சி எதிர்ப்பு டயட்டில் ஆலிவ் எண்ணெய், பழங்கள், பச்சை இலை காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் கொழுப்பு மீன்கள் போன்ற உணவுகளை அழற்சி எதிர்ப்பு டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இவை உங்க அழற்சியை குறைக்க உதவுகிறது.

எடை இழப்பு டயட்

சொரியாஸிஸ் மற்றும் சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் உடல் பருமன் போன்ற பிற உடல்நல சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் தங்கள் எடையை நிர்வகிக்க வேண்டும். தேசிய சொரியாஸிஸ் அறக்கட்டளையின் கூற்றுப்படி, உங்கள் எடை குறைக்கும் டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஒல்லியான இறைச்சி, மீன், பீன்ஸ், முட்டை, கோழி மற்றும் கொட்டைகள் போன்ற உணவுகள் இருக்க வேண்டும்.

பசையம் அழற்சி அல்லது செலியாக் அழற்சி இருப்பவர்கள் பசையம் இல்லாத உணவை தேர்வு செய்ய வேண்டும்.ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வது தடிப்புத் தோல் அழற்சியை போக்க உதவுகிறது. இது சிறப்பாக உங்க எடையை  நிர்வகிக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top