வயிறு கோளாறு, அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற மூன்றையும் சரி செய்யக்கூடிய அற்புதமான பாட்டி கஷாயம் குறித்து நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்களா? அதை பின்வருவனவற்றுள் பார்க்க போகிறோம்.
ஆரம்ப அறிகுறியாக உடலில் உண்டாகும் அறிகுறிகள் எல்லாமே நோய்கள் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.பெரும்பாலான நோய்களை ஆரம்பத்தில் கவனித்தாலே கட்டுப்படுத்த முடியும்.
மோசமான எல்லா நோய்களுக்கு முன்பும் உடல் எதிர்ப்பை காட்டுவதோடு அதற்கான அறிகுறிகளையும் வெளிப்படுத்தவே செய்கிறது. அதை நம் முன்னோர்கள் சரியான முறையில் உணர்த்துவார்கள். அதனால் தான் ஆரம்ப கட்டத்திலேயே வரும் முன் காப்போம் என்பது போல கை வைத்தியம் மூலம் சரி செய்து விடுவார்கள். அப்படி வயிறு பொருமல், நெஞ்செரிச்சல், அஜீரணத்துக்கு என மூன்றையும் சரி செய்யும் எளிமையான கஷாயம் குறித்து இப்போது பார்க்கலாம்.
கஷாயம் தயாரிப்பு

வீட்டில் எப்போதும் இருக்க கூடிய பொருள் தான் கருவேப்பிலை, இஞ்சி , சீரகம் மூன்றும். இவை எல்லாமே அருமையான மருத்துவ குணங்களை கொண்டிருக்க கூடியவை. கொடிய நோய்களை வராமல் தவிர்க்க உதவக்கூடியவை. இந்த கஷாயம் தயாரிப்பு குறித்து தான் பார்க்க போகிறோம்.
இரண்டு டம்ளர் அளவு கஷாயத்துக்கு
தேவையான பொருள்கள்:
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- இஞ்சி – சிறு உள்ளங்கை அளவு
- சீரகம் – 3 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை
சுத்தம் செய்த கறிவேப்பிலையை அலசி உரலில் இட்டு இடித்து வைக்கவும். இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி இடிக்கவும். சீரகத்தையும் லேசாக வறுத்து பொடித்து வைக்கவும்.
நீரை இரண்டு டம்ளர் அளவு கொதிக்க வைத்து இடித்த இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும். சீரகத்தை இறுதியாக சேர்க்கவும். லேசாக கொதித்ததும் இறக்கி 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டி ஆறவிடவும். பொறுக்கும் சூட்டில் வெதுவெதுப்பாக இருக்கும் போது பொறுமையாக வாயில் வைத்து விழுங்கினால் தொண்டைக்கு அமிர்தமாக இருக்கும்.
கஷாயம் நன்மைகள்

தினமும் இரண்டு டம்ளர் வரை கஷாயத்தை 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ( இவர்களுக்கு இஞ்சி மற்றும் சீரக அளவை குறைத்து சேர்க்கவும்) வயதானவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.
இவை உணவுக்குழாயில் தேங்கியிருக்கும் அமிலத்தை வெளியேற்றும். இதனால் அஜீரணக்கோளாறுகள் தடுக்கப்பட்டு செரிமான சிக்கல் சீராகும். வயிறு பொருமல் சீராகும். கஷாயம் குடித்த உடனே மாற்றத்தை பெறுவீர்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து அதிக உபாதை இருப்பவர்கள் இதை குடிக்கலாம். பிறகு படிப்படியாக குறைத்து வாரம் ஒருமுறை இதை குடித்து வரலாம். இது எதிர்ப்பு சக்தியும் கொடுக்க கூடியது.
இஞ்சி – கஷாயம்

இஞ்சி ஜீரணத்தை தூண்டும் பொருள், இது எதிர்ப்பு சக்தி அளிப்பவையும் கூட. குடல் அசைவுகளை சீராக்கும். பித்தத்தை வெளிப்படுத்தி செரிமானத்தை தூண்டிவிடும். உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சு கொள்ள இவை உதவுகிறது. வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. அதனால் தான் இஞ்சி தேநீர் குடிக்கும் வழக்கத்தை நம் முன்னோர்கள் வழக்கத்தில் வைத்திருந்தார்கள்.
கறிவேப்பிலை – கஷாயம்

செரிமானத்துக்கு உதவியாக இருப்பவை கறிவேப்பிலையும் இஞ்சியையும் பயன்படுத்துவதாகும். வயிறு மந்தம், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் என அதிக சிக்கலை கொண்டிருப்பவர்களுக்கும் ஏற்ற மருந்து. கறிவேப்பிலையை சாப்பிட்டால் செரிமானம் தூண்டப்படும்.
அஜீரணக்கோளாறால் பசியின்மை பிரச்சனை எதிர்கொள்பவர்களுக்கு தீர்வாக இருக்கும். ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும். கறிவேப்பிலையை எடுத்துகொண்டால் மந்ததன்மை இல்லாமல் சுறுசுறுப்பாக வளையவரலாம். வயிறு கோளாறுகளையும் இல்லாமல் செய்யும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.
சீரகம்- கஷாயம்

சீரகம் நெஞ்செரிச்சலை போக்கும் அருமருந்து. நெஞ்செரிச்சலும் புளிஏப்பமும் வரும் போது கால் டீஸ்பூன் சீரகத்தை எடுத்து உள்ளங்கைகளால் கசக்கி வாயில் போட்டு உமிழ்நீரோடு மென்று விழுங்கினால் பலன் கிடைக்கும்.
வயிறு வலி, வயிறு உப்புசம், வயிறு பொருமல், வயிறு வீக்கம் போன்ற வயிறு கோளாறுகளை சரிசெய்ய கூடியது சீரகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது வயிறு வலியையும் போக்க சீரகம் ஒன்று போதுமானது.
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இத்தகைய கைவைத்திய குறிப்புகள் குறித்து அறிந்து வைத்திருப்பது நல்லது. நெஞ்செரிச்சல், வயிறு பொருமல், அஜீரணக்கோளாறுகள் கோடையில் எதிர்கொள்ளும் போது இந்த கஷாயம் நிச்சயம் உதவும். அதோடு இதை வாரம் ஒரு முறை எல்லாருமே குடிக்கலாம். உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கும். உணவுக்குழாயில் அமிலம் தேக்காமல் இருக்க உதவும். அசைவ உணவுக்கு பிறகு வெந்நீருக்கு மாற்றாக இதை குடித்து வந்தால் போதுமானது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






