உடல் எடை குறைய வேண்டுமா? பால் மட்டும் குடித்து பாருங்கள்

 

பால் என்பது ஊட்டச்சத்து மிக்க பானம்.பாலில் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள் , தாதுக்கள் , ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் நிறைந்து உள்ளது. தினசரி ஒரு டம்ளர் பால் அல்லது பால் சார்ந்த பொருட்களை உட்கொள்ளும் போது எலும்புகளுக்கு வலு சேர்க்கும், சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. பாலில் உள்ள புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் பாலினை மட்டும் அருந்தி வந்தால் உடல் எடை குறையும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

பால் எப்படி உடல் எடையை குறைக்கிறது?

 

பாலில் கால்சியம் மிகுந்து இருப்பது நாம் அறிந்ததே. பாலில் உள்ள கால்சியம் கொழுப்புகளை , கொழுப்பு அமிலங்களாக சிதைக்கிறது. மேலும் உடலில் கொழுப்பு உட்கிரகிப்பதை தடுக்கிறது , விளைவு உடல் எடை கட்டுக்குள் இருக்குமே தவிர, அதிகரிக்காது. பால் என்பது கலோரி மதிப்பு குறைவாகவும், அதேசமயம் புரதச்சத்து மிகுந்த பானம் என்பதால் தசை வளர்ச்சியை அதிகரிக்கும். 

 

peptide YY (PYY) … எனும் ஹார்மோன் பாலில் உள்ளது. இந்த ஹார்மோன் வயிறு நிறைந்த உணர்வு தருவதால் சாப்பிடும் அளவு குறைகிறது. இதனால் கூட உடல் எடை அதிகரிப்பதில்லை.

பாலினை எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ?

 

பால், தயிர், மோர், வெண்ணெய் என்று ஏதாவது ஒரு வகையில் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

பால் : ஸ்மூத்தி, ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் ஆகியவற்றில் கலந்து உண்ணலாம். வெறும் பால் மட்டும் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் தவறாமல் பால் குடித்து வரலாம்.

 

தயிர் : தயிர் பச்சடி, காய்கறிகள் ஸ்மூத்தி ,ஃபிளாக்ஸ் ( flaxseed ) சேர்த்து தயிர் , ..என் நம் விருப்பப்படி உண்ணலாம்.

 

வெண்ணெய் : பட்டர் காபி 

 

யோகர்ட் : இனிப்பு இல்லாத யோகர்ட் சாப்பிடலாம்.

பால் அலர்ஜி உள்ளவர்களுக்கு இந்த டயட் உதவாது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top