உங்கள் துணைவியை மனஅழுத்தத்திலிருந்து வெளிவர வைக்கணுமா – இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

மன அழுத்தம் என்பது  பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதனை கவனிக்கப்படாமல் இருக்கும் போது தான் மனஅழுத்தம் என்பது பெரிதாகி அதனால் குடும்ப உறவு கூட பாதிக்கப்படலாம்.


மன அழுத்தம் என்பது இன்றளவில் எல்லோரையும் பெரிய பாதிப்புக்கு  உள்ளாக்குகிறது. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய வாழ்க்கை முறை. கவனிக்கப்படாமல் இருக்கும். இந்த  மனஅழுத்தம் என்பது பெரிதாகி அதனால் குடும்ப உறவு கூட பாதிக்கப்படலாம். மன அழுத்தத்தை காய்ச்சல், சளி மாதிரி சுலபமாகவும், வெளிப்படையாகவும் தெரிந்து கொள்ள முடியாது. உங்கள் துணையிடம் திடீரென அதிக பரபரப்பு, சோர்வு, திடீர் அமைதி, தனிமையில் இருக்க விரும்புதல், மனதில் எரிச்சல் உணர்வு போன்றவை இருந்தால் நீங்கள் உஷாராக செயல்பட வேண்டும்.


மேலே சொன்ன அறிகுறிகள் போன்ற பிரச்சனைகளை ஏதேனும நீங்கள் உணர்ந்தால் உடனே உங்கள் துணையிடம் மனம் விட்டு பேச வேண்டும். என்னப்பா என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? என்று கனிவாக மனம் விட்டு பேசுங்கள். மனம் விட்டு அக்கறையாக பேசினாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். சிலர் சுலபத்தில் மனதில் இருப்பதை வெளியில் சொல்ல மாட்டார்கள். நாமாக விசாரிப்பதன் மூலம் தங்கள் மீது அன்பு செலுத்தும் துணை உள்ளது என்ற உணர்வை அவர்களுக்கு உறுதிப்படுத்தலாம். 

வேலைக்கு வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் செல்பவர்கள் விடுமுறை கிடைத்தால் ஓய்வு எடுக்க  நினைப்பார்கள். ஆனால் உங்கள் துணைக்கு அந்த சமயத்தில் விருப்பம் இருக்கும் போது பயணங்கள் மேற்கொள்வது சிறந்தது. வாரம் ஒருமுறையேனும் பக்கத்தில் இருக்கும் பூங்கா, ஷாப்பிங் மால் போன்ற இடங்களுக்கு சென்று வரலாம். அப்போது மனம் விட்டு பேசவும் நிறைய நேரம் கிடைக்கும். பார்க்கில் விளையாடும் குழந்தைகளை பார்க்கும் போது மனம் லேசாக மாறி உங்கள் துணையின் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும்.


 ஒவ்வொருவருக்கும் சினிமா பார்ப்பது, புத்தகங்கள் வாசிப்பது ,கார்ட்டூன் பார்ப்பது, வெளியே செல்வது, விதவிதமான உணவு வகைகளை உண்பது என்று தனிப்பட்ட ஆசைகள் விருப்பங்கள் இருக்கும்.  உங்கள் துணையும் நீங்களும் சேர்ந்து செய்ய விரும்பும் விஷயங்களை பட்டியலிடுங்கள். உடனடியாக அவர் விரும்புவதை கேட்டறிந்து அதை செய்யத் தொடங்குங்கள்.

உங்கள் துணையின் மனநிலையை அறிந்து கொள்ள அவரிடம் நன்றாக மனம்விட்டு பேசுங்கள். மனதை லேசாக மாற்ற மேற்கொண்ட செயல்கள் பலன் அளித்திருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவரது வேலை, குடும்ப ரீதியான பிரச்சனைகள் அனைத்திலும் அவருக்கு துணையாக இருங்கள். கண்டிப்பாக கேலி, கிண்டல் செய்வது குறை கூறுவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் மேல் இருக்கும் அன்பான நம்பிக்கை குறைந்து காலப்போக்கில் உங்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளாத அளவிற்கு  மனநிலை மாறிவிடும்.


ஒரு குடும்பத்தில் அவர்களது துணையின் மன மகிழ்ச்சியை பெறுவதில் தான்  இனிமையான வாழ்க்கை பயணத்தை தொடர முடியும். அதன் அடிப்படையில் குடும்பத்தில் குதூகலம் நிலவ உதவும் நம்முடைய துணையின் மகிழ்ச்சி உங்கள் கைகளில் தான் உள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top