பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கிறதா? இதோ உங்களுக்கான தீர்வு யோகாசனம்…

பெண்களுக்கு  ஆற்றல் சக்தி , எதிர்ப்பு சக்தி குறையும்போது நீங்கள்  ஆசனங்கள் மேற்கொள்வது  நல்லது ஏனென்றால் குறைபாடுள்ள சக்தியை  அதிகரிக்கச் செய்து, தண்டுவடத்தைச் சீர் செய்ய உதவுகின்றது.

 

யோகாசனம்

பொதுவாக அனைவரின் உடல் ஆரோக்கியமும்  குடும்பத்திலுள்ள பெண்களின் கரங்களில் தான் இருக்கிறது. ஏனென்றால் பெண்கள்தான் வீட்டில் உள்ள மழலைகள் தொடங்கி முதியவர் வரை என அனைவரின் உடல்நலத்தையும் கண்ணும், கருத்துமாய் பேணிக் காப்பவர்கள். அதனால்தான் பெண்களை வீட்டின் ஹோம் மினிஸ்டர் எனக் கூறப்படுகின்றனர். இன்னும் மேலே ஒருபடிபோய் பெண்ணினத்தை கல்ப விருட்சம் என்றும் சொல்லலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் நாட்டையே பாதுகாக்கும் வல்லமை கொண்ட பெண்ணினத்தின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. தன் நல ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளாததுதான் இதற்கு முக்கிய காரணம்.

இளம் பெண்களின் உடல்நலம் சார்ந்த  பிரச்சனைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அப்பிரச்சனையில் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் தாய்மை அடைதல் முதன்மையானவையாகத் திகழ்கின்றன. இயற்கை முறையாக  நடக்க வேண்டிய ‘தாய்மை’ என்ற உன்னதம் செயற்கை முறையில் மருந்து மற்றும்  மாத்திரைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறார்கள் . 

இதற்கு ஹார்மோன்கள் தான் காரணம் பெண்களுக்கு ஹார்மோன்கள் சரி விகிதத்தில் இல்லாமல் இருந்தால் தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உள்ளவர்கள் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி சீராக செயல்பட ஒரே தீர்வு மற்றும் சிறந்த வழி யோகாசனம்தான்.

நம்முடைய ஆற்றல் சக்தியை அதிகரிக்க  “பிருந்தாவனம்” என்ற குழு ஆசனங்கள் செய்ய உதவுகிறது . இதனால் இந்த ஆசனத்தை  “பவலமுத்தாசனம் பாத்ரி” என்றும் சொல்வார்கள் .பன்னிரண்டு நிலைகள் சூரிய நமஸ்காரத்தில்  உள்ளதைப்போன்று, இந்த ஆசனமானது எட்டு நிலைகளை கொண்டது. இந்த ஆசனங்களைச் மேற்கொள்ளும்போது பெண்களுடைய ஆற்றல் அதிகரிக்க செய்யும். தண்டுவடநரம்பிலுள்ள  அடைப்பைச் சரி செய்து, உடல்வலி, சோர்வு நீக்கி ,குறிப்பாக, இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புக்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும். ஹார்மோன் சீராக இல்லாத காரணத்தால்  பெண்களுக்கு ஏற்படும் ‘மாதவிடாய்’ பிரச்சனையை சீர்படுத்த உதவுகிறது. 

 

 

 

 

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top