சிவ சக்தி தியான ஐக்கிய முறையைபற்றி நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

 இந்த சிவசக்தி நம் உடலில் இணைந்திருக்க வேண்டும். அதற்கு பாலமாக இருப்பது நம் முதுகுத்தண்டுதான். பிராணனையை அதற்குள் உள்ள சக்கரங்கள் வழியாக இணைக்க வேண்டும். அது எப்படி என்பதைப் தெரிந்து கொள்வோம்.

தியானம்

முக்கியமான சக்கரங்கள் மனித உடல்களில் உள்ளன. இந்த சக்கரங்களானது  நமது முதுகெலும்பை மையமாக கொண்டு இயங்குவதாகும். இதில் கவனிக்க கூடிய முக்கியமான மனிதனின் முதுகெலும்பு திடமாக வைத்திருக்க  வேண்டும். அதற்கு தினந்தோறும்  மனிதர்கள்  யோகாசனங்களை கற்க வேண்டும். எல்லா ஆசனங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. குறிப்பாக பாதஹஸ்த ஆசனம், பச்சி மோஸ்தாசனம், புஜங்காசனம் தினந்தோறும்  இந்த மூன்றையும் ஒரு நிமிடம் செய்து வந்தாலே போதும். நம் உடம்பில் உள்ள சக்கரங்களை நாம் சிந்திப்போம்.

மூலாதாரச் சக்கரம்- முதுகுத்தண்டின் அடி உள் பகுதி

 “சுவாதிஷ்டானச் சக்கரம்” முதுகுத்தண்டின் அடிப்பகுதியிலிருந்து 4” மேல்.

“மணிபூரகச் சக்கரம்”உள் பகுதி வயிற்று  அதற்கு நேராக பின் புறத்தில் இருக்கும் முதுகுத்தண்டு.

அனாகதச் சக்கரம்- இருதயம் இதற்கு நேராக பின்புறத்தில் இருக்கும்  முதுகுத்தண்டு.

விசுக்தி சக்கரம்” உள் பகுதி தொண்டைக்கு நேராக இருக்கும் பின்புறத்தில் உள்ள முதுகுத்தண்டு.

ஆஞ்ஞை சக்கரம் – நெற்றிப்பொட்டு (சதாசிவம்).

பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் “மூலாதாரச் சக்கரம்” சக்தி என்றால் ஆஞ்ஞை சக்கரம் சதாசிவம். நம்  உடலில் இந்த சிவசக்தி  இணைந்திருக்க வேண்டும். அது இணைக்கப்பட்டால்  சிவசக்தி ஐக்கிய யோகதியானமாகும். அப்படி இணைந்திருப்பதால் மனிதன் அளவிடற்கரிய சக்தியை பெறுவான். தன் கர்ம வினைகள் அழிக்கப்படுகின்றன. அளவுகடந்த சந்தோசத்தை அடைகின்றான். ஆரோக்கியமான உடலைப் பெறுகின்றான். உடல் பிணிகள் எல்லாம்  நீங்குகின்றன. நல்ல புகழுடன்  செல்வச்செழிப்புடன் வாழ்வான். மற்றவர்களையும் அப்படி வாழ வழி வகுக்கும் சக்தியையும் பெற்று கொள்கிறான். 

சிவசக்தி தியான முறை:

தரையில் போர்வையை விரித்து கிழக்கு நோக்கி நேராக அமர்ந்து கொள்ளுங்கள்.

நேராக முதுகெலும்பு வைத்திருக்குமாறு அமர வேண்டும்.

தனது கண்களை மூடிக் கொள்ளவும்.

மூச்சை உள் இழுத்து இரு “நாசி” வழியாக மிக பொறுமையாக மூச்சை வெளிவிடவும்.

ஒரு 5 நிமிடம் இவ்வாறு செய்யவும்.

 முதல் சக்கரமான மூலாதாரத்தில் உள் பகுதியில் கடைசி முதுகுத்தண்டின்  பின் உங்கள் மனதை நிலைநிறுத்திக்கொள்ளவும்.

 உங்கள் மூச்சோட்டத்தை 2 நிமிடம் அந்த இடத்தில் வைத்து தியானிக்கவும்.

பிறகு அடுத்த சக்கரம் சுவாதிஷ்டானம்.உங்களது மனதை அதில் 2   நிமிடம் நிறுத்தி மூச்சோட்டத்தை தியானிக்கவும். 

பின்னர் உங்களுடைய மூச்சோட்டத்தை மணிபூரக சக்கரத்தில் 2 நிமிடம் தியானிக்கவும்.

அதன் பிறகு  உங்கள் மனதை அனாகதச் சக்கரத்தில்  நிறுத்தி மூச்சோட்டத்தை தியானிக்கவும்.

பிறகு உங்கள் மனதை விசுக்தி சக்கரபகுதியில் நிறுத்தி தியானிக்கவும். 

மூச்சோட்டத்தை 2 நிமிடம் தியானிக்கவும்.

பின்பு ஆஞ்ஞை சக்கரம். உங்களது மூச்சோட்டத்தை நெற்றிப் புருவமத்தியில்  நிறுத்தி  5 நிமிடங்கள் தியானிக்கவும்.

பிறகு  கழுத்து முதுகெலும்பில் 30 விநாடிகள் உங்கள் மனதை நிறுத்தவும். பின்பு 30 வினாடிகள் நடு முதுகெலும்பில் நிறுத்தவும். பின் முதலில் ஆரம்பித்த மூலாதாரச் சக்கரம்  30 வினாடிகள் அடி முதுகெலும்பில் நிறுத்தி “ஓம் சாந்தி” மூன்று முறைகள் சொல்லி கண்களை திறந்து தியானத்தை நிறைவு செய்யவும்.

பலன்கள்:

இந்த சிவசக்தி தியானத்தை அனைவரும்  காலை, மாலை  அரை மணி நேரம் செய்யுங்கள். உங்கள் உடலில் உள்ள கோனாடு சுரப்பி, அட்ரினல் சுரப்பி, பாங்கிரியாஸ் சுரப்பி, தைமஸ் சுரப்பி, தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பிகள் மிகச் சிறப்பாக சரியான விகிதத்தில் சுரக்கும். எனவே பெரும்பாலான மனிதர்களுக்கு இன்று உள்ள நீரிழிவு, ரத்த அழுத்தம் அறவே நீங்கும். இதயம் சிறப்பாக இயங்கும். மன அழுத்தம் நீங்கும்.

“பூர்வ ஜென்ம” கர்ம வினைகளினாலும் நாம் செய்த பாவத்தினாலும் முன்னோர் சாபங்களினால் வந்த எல்லா வினைகளும், அறவே அறுத்து ஆத்மானந்தத்தை தரும்.

மனிதனுக்கு உலகில் இருக்கக்கூடிய உடல் ஆரோக்கியம், பின்பு  இந்த தியானத்தின் மூலம் உள் அமைதி இரண்டும் கிடைக்கும். மேலும் மரணபயம் நீங்கும். பிறவாப்பெருநிலையான முக்தி பதம் கிடைக்கும்.

 நமக்கு மன அழுத்தம் இன்றைய நவீன இயந்திரமான உலகில் ஏற்படுகின்றது. அதனால் பலவிதமான உடல் சார்ந்த பாதிப்புகளுக்கு உள்ளாகிறோம்

கழுத்துவலி, மூட்டுவலி, இடுப்புவலி, அல்சர், மூலம், முதுகுவலி உடலில் மேலும்  ஏற்படும் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும்  இந்த மேற்கூறிய தியானம் நல்ல பலனைக் அளிக்கும். அனைத்து நோய்களும் நீங்கி மகிழ்ச்சியாக  வாழ்வீர்கள்.  

 

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course