காதலில் விழுந்த பிள்ளைகளை சமாளிப்பது எப்படி?

குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பும் பொறுமையும் நிறைந்த பணி.குயவன் கையில் உருவாகும் மண்பானை போன்று தான். கவனம் சிதறினால் வடிவம் மாறுவதோடு , வனப்பும் குறைந்து விடும். குழந்தைகளின் உள்ளமும் , கொஞ்சம் உளவியலும் தெரிந்தால் போதும் நீங்கள் ஒரு சிறந்த பெற்றோர் தான்.

 

கண்டிப்பு கைக்கொடுக்குமா?

 

” பிள்ளையை அடித்து வளர்க்கணும், முருங்கையை ஒடித்து வளர்க்கணும்”, என்ற பழமொழி உள்ள ஊர் இது. கண்டிப்பும் , பாசமும் பார்வை தரும் இருவிழிகளாக இருக்க வேண்டும். சாலையில் விபத்து இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக சாலை விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.  சாலை விதிகள் என்னை கட்டுப்படுத்துகிறது என போராடுவது எவ்வாறு மடத்தனமே அதே அளவிற்கு குழந்தைகளுக்கு கண்டிப்பு அவசியமா எனும் கேள்வி.

 

கண்டிப்பின் அளவும் , எந்த விஷயத்திற்க்காக கண்டிப்பு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில் குழந்தைகள் நம்முடைய அசையாசொத்து அல்ல , உயிரும் உணர்வும் நிறைந்த ஜீவாத்மாக்கள்.

 

தேவையை முன்னிறுத்துங்கள்:

 

பதின்பருவ குழந்தைகளை கையாளும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் நிறைய உள்ளது.அதில் இந்த பள்ளிப்பருவக்காதல், கல்லூரி காதல் உண்மையில் எதிர்கால கனவில் மண் அள்ளி போட்டு விடுகிறது.

 

வாழ்க்கையின் அஸ்திவாரமே இந்த பதினாறு வயதில் தான் ஆரம்பிக்கிறது.ஹார்மோன்களின் சதியால் மனம் தடுமாறுவதும் இந்த வயதில் தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையின் மனதில் இந்த எதிர்ப்பாலின கவர்ச்சியை பற்றி எடுத்துக் கூற வேண்டும்.உனக்கான லட்சியத்தை நிறைவேற்ற என்ன செய்ய போகிறாய் என்பதை அடிக்கடி கேளுங்கள். இதைச்செய்யாதே , அதை செய்யாதே என அதிகாரம் செய்வதை விட , எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய அடிக்கடி சொல்லுங்கள். உதாரணமாக போனை நோண்டாதே என்பதை விட , அந்த ஓய்வு நேரத்தை திசைதிருப்புங்கள். இந்த வயதில் இருக்கும் மிதமிஞ்சிய ஆற்றலை விளையாட்டு , குடும்ப வேலைகளில் பகிர்தல் என மடை மாற்றுங்கள்!

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top