இளம் வயதிலேயே பெண்கள் கூர்மாசனத்தை பயிற்சி செய்து வந்தால் கர்ப்பப்பையில் உள்ள பிரச்சனைகள் நீங்கும் மற்றும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கப்படும்.

செயல்முறை:
தரையில் போர்வையை விரித்து அதன் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், அதாவது பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும். அந்த இடைவெளியில் நெற்றி தரையில் பதித்தபடி இரண்டு கைகளையும் முதுகின் பின்பக்கமாக பிடித்து கொள்ள வேண்டும்
முதலில் பிடிக்கும்போது அவ்வாறு எளிதாக பிடிக்க வராது. அதனால் நன்றாக பழகிய நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரலாம். குனியும் போது முதுகுத் தண்டின் கீழே (நுனி பாகத்தையும்), நிமிரும்போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்திக்கொண்டு மூன்று முறை இந்த ஆசனத்தை இரண்டு நிமிட இடைவெளிவிட்டு செய்யவும்.

எனவே இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டு எலும்பு, கழுத்து எலும்பு சம்பந்தப்பட்ட வலி நீங்கும். இதனால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்க செய்கிறது. பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் குறைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவதாகும்.
அதன் பிறகு பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப் போக்கு, வெள்ளைப்படுத்துதல் போன்ற பிரச்சனைகள் நீக்குவதாகும். இளம் வயதிலேயே பெண்கள் பயிற்சி செய்தால் கர்ப்பப்பையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி சுகபிரசவம் உண்டாகும். பின்பு பெண்களுக்கு அதிக இடுப்பு சதை வயிறுசதை கால் தொடை சதைகளை சரிப்படுத்தி மிடுக்கான, இளமையான தோற்றத்துடன் அழகான உடலமைப்பை வர வைக்கலாம். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் முதுகு வலி ஏற்படாது. அதிக சதை வளராது . நீரிழிவு வராது.

இதனால் சரியான நேரத்தில் பிரசவ வலி ஏற்படும். பிரசவமும் சுகமாக நடக்கும் . சிறுநீர்ப்பையில் கற்கள், பித்தப்பையில் கற்கள் இருக்காது. எனவே கற்கள் இருந்தாலும் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால் கரைந்து விடும். கழுத்து முதுகுவலி வராது. குழந்தை பிறந்த பிறகும் இந்த ஆசனத்தை 3 மாதம் கழித்து பெண்கள் பயிற்சி செய்யலாம். இதனால் மிக இளமையான உடலமைப்பை பெறுவதோடு மனமும் அமைதி பெறும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






