அதிமதுரத்தின் அற்புத பயன்கள்

Liquorice

Liquorice என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இனிப்பூட்டியினை தான் அழகு தமிழில் அதிமதுரம் என்கிறோம். என்ன ஒரு அர்த்தமுள்ள பெயர். “மதுரம்” என்றால் இனிப்பு அதி எனும் போது நிறைய இனிப்பு என்று பொருள் தரும்.

ஐரோப்பா, ஆசியப் பகுதியில் விளையும் அதிமதுரம் மிட்டாய், இருமல் மருந்துகள், சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் பயன்படுகிறது. இதன் இனிப்பு சுவைக்காகவே குழந்தைகளுக்கான மருந்துகளில் பயன்படுத்துகின்றனர்.

சர்க்கரையை விட ஐம்பது பங்கு இனிப்பு இருப்பதற்கு காரணம் அதிமதுரத்தில் glycyrrhizin இருப்பதால் தான்.

மருத்துவ பயன்கள் :
* அதிமதுரம் ஒரு மலமிளக்கி. வழவழப்பாக இருக்கும் என்பதால் மூலநோயின் எரிச்சலை தணிக்கும்.

* சுவாச குழாய்களில்  படிந்திருக்கும் கபம் முதலியவற்றை கரைக்கும்.

Licorice Benefits

* தொண்டை கரகரப்பு, வறண்ட தொண்டை, இருமல்களை போக்கும், எனவே தான் பெரும்பாலான இருமல் மருந்துகளில் அதிமதுரம் உண்டு.

* ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்து. நுரையீரலுக்கு வலுதரும் சிறந்த டானிக்.

* அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த மருந்துப்பாலை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.

* அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

* தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் காலம்காலமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து, உமிழ்நீரில் கரைந்து  தொண்டைக்கு இதம் தரும்.

* அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிற்றுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இதில் உள்ள glabridin தோலில் உள்ள  திசுக்களுக்கு வலு தருகிறது. கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை நீக்குகிறது. தோல் சுருக்கங்களை நீக்குகிறது.

* நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும்.

* இதன் அதீத இனிப்பு சுவையால் பற்பசைகளில் பயன்படுத்துகின்றனர்.


Licorice/Liquorice is called as “Athimadhuram” in tamil. Licorice is taken by mouth for various digestive system complaints including stomach ulcers, heartburn. It is also taken for sore throat, bronchitis, cough, and infections caused by bacteria or viruses. It can help with constipation, and as an aid for digestive problems. Licorice root contains an active compound called “glabridin”. The extract help diminish the appearance of dark under-eye circles, discoloration and age spots. Glycyrrhizin, accounts for the sweet taste of licorice root. Athimadhuram is highly used in Siddha and Ayurveda medicines.


scroll to top