என்ன அடுத்து கருப்பு பூஞ்சையா?

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வட மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

              Guidelines on black fungus

இப்போது இதன் அறிகுறி என்ன? யாரெல்லாம் அதிகம் பாதிக்க பட போகிறார்கள்? பாதுகாப்பு பற்றி பார்க்கலாம்:

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவருக்கும் இந்த ‘கருப்பு பூஞ்சை’ பாதிப்பு ஏற்படாது. அதனால், யாரும் அச்சமடைய வேண்டாம். புற்றுநோய், சிறுநீரக, சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

Lethal black fungus that rots organs emerges in Covid-19 patients across India

இவர்களுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டால் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.  அவர்களின் உயிரை காப்பாற்ற அதிகமாக ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எளிதாக ‘கருப்பு பூஞ்சை’ நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

COVID-19: Beware of Black Fungus

இந்த ‘கருப்பு பூஞ்சை’ நோய் உடலில் எந்த பகுதியில் ஏற்படலாம். எலும்புகளைக் கூட அரிக்கும் தன்மை பூஞ்சைக்கு உள்ளது. குறிப்பாக, தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மூக்கு, வாய், கண்களின் கீழ் என முகத்தில் பூஞ்சை ஏற்படுகிறது. அதைக் கவனிக்காமல் விட்டால் பூஞ்சை அரித்துக் கொண்டே கண்களுக்குச் சென்று பார்வை இழப்பை ஏற்படுத்தி கண்ணை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.அப்படி கண்ணை எடுக்க வில்லை என்றால் பூஞ்சை மூளைக்கு சென்றுவிடும். மூளையை பாதித்து உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.

Black Fungus: Govt shares do's and don'ts amid rise in Mucormycosis cases in Covid patients

அதனால், தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கடுமையான தலைவலி, கண்களில் வலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், திடீரென்று பார்வை குறைதல், சைனஸ் பிரச்சனை, மூக்கில் வலி, வாய் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதி கருப்பாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். குறிப்பாக,கொரோனாவில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். 

எப்படி தொற்றுகிறது: 

 • அழுகிய காய்கறிகள், பழங்களில் இருக்கும். 
 • சுவாசிக்கும் போது மூக்கு திசுக்களை பாதிக்கும். 
 • ஆரோக்கியமான நபருக்கு பூஞ்சையால் பாதிப்பு இல்லை. 
 • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை பாதிக்கும். 

முன்னெச்சரிக்கை:

 1. ஆரோக்கியமான உணவு அவசியம்.
 2. சர்க்கரை நோயாளிகள், இரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க வேண்டும். 
 3. கொரோனா சிகிச்சையின் போது இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும், எனவே ரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். 
 4. உடற்பயிற்சி செய்ய வேண்டும். 
 5. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். 
 6. அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 
 7. வெளியே செல்ல நேர்ந்தால் இரட்டை முக கவசம் அணிய வேண்டும். 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas