இடுப்பு எலும்புகளை பலப்படுத்தக்கூடிய ஆசனம்…

யோகா பயிற்சியில் இடுப்பு எலும்புகள் வலுப்பெற்று தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மை தருகிற ஆசனம் ஆகும். அதுதான் “ஏகபாத ஏக பாத ராஜ கபோடாசனம் எனலாம். 

நம்மளோட பாதி உடல்களை  இடுப்பு பகுதிதான் தாங்குகிறது. அது சமனாகும்போது, இடுப்பைதாங்கும் மூட்டு மற்றும் பாதங்களுக்கு எந்த கோளாறுகளும் ஏற்படாது. எனவே இடுப்புபகுதி பலம்பெற உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. பின் யோகா செய்வதும் மிக நல்லது. யோகாவில் இடுப்பு எலும்பு பகுதிகள் பலம்பெற்று தசைகளுக்கு புத்துணர்ச்சித்தன்மை தருவது போல் ஆசனம் உள்ளது. இதுதான் ஏகபாத ராஜ கபோடாசனம் என்பதாகும். 

“ஏக பாத” என்று சொன்னால் ஒற்றி பாதம், ராஜ என்றால் அரசன், கபோட் என்றால் புறா. ஒற்றை காலைக் கொண்டு புறாவை போன்ற தோற்றத்தில் ஆசனத்தை செய்ததால் இப்பெயர் பெற்றது. தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட  உறுப்புகளுக்கு  இந்த யோகாவின் மூலம் பயிற்சி தருவது நல்லது. எப்படி செய்வது என்று தொடர்ந்து பார்ப்போம்….

 

மண்டியிட்டு முதலில் உட்காருங்கள். அதற்கு பிறகு குழந்தை தவழ்வது போல கைகளை முன்னே ஊன்றுங்கள். பொறுமையாக ஆழ்ந்து மூச்சை இழுத்து விடவும். அதன்பிறகு இடது காலை மடக்கி வலது காலை பின்னாடி நீட்டிக்கொள்ளவும்.பின் இரு கைகளையும் ஊன்றிக் கொள்ளுங்கள்.

அதற்கு பிறகு மேலே படத்தில் காட்டியது போல்மெதுவாக வலது காலை மடக்கி மேலே நோக்கி கொண்டு வரவும். நமது கைகளால் வலது பாதத்தினை பிடித்துக் கொள்ளுங்கள். பின்பு  மூச்சினை நன்றாக இழுத்து விடவும். பின்னர் இயல்பு நிலைக்கு வந்து விடவும். இப்பொது இடது காலிலும் இதே போன்று செய்யவும். 

பின்பகுதிகளுக்கு புத்துணர்ச்சியை தரும். பின்பு அடிவயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக செயல்படும். மனத்தளர்ச்சி, சோம்பல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com