குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பா பொறக்கும்னு சொன்னது கட்டுக்கதையா!!!!!

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பா பிறக்கும் என்ற ஒரே நம்பிக்கையில் தான் கர்ப்பமுற்ற முதல் மாதத்திலிருந்தே பெண்கள் அதை பாலில் கலந்து குடிக்கிறார்கள். கசப்பான சுவையை கொண்டு இருந்தாலும் தன் குழந்தைக்காக சாப்பிட்டுவருகின்றனர். அப்படிஒன்று இருந்தால் கருப்பு குழந்தைகள் இருந்திருக்கவே கூடாது அல்லவா…அதற்காக குங்குமப்பூ சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை. அதன் உண்மை தத்துவத்தை மறைத்து நம் முன்னோர் ஏன் அதை சாப்பிட பரிந்துரை செய்தனர் என்பதை பார்க்கலாம். 

குங்குமப்பூ கசப்பு சுவை கொண்டதால் பெண்கள் அதை எடுத்து கொள்ள மாட்டார்கள் என்று தான், நம் பாட்டி, அம்மா அனைவரும் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பாக பிறக்கும் என்ற வதந்தியை கிளப்பி விட்டனர். அதுவே தற்போது உள்ள நிலைக்கு காரணம், கேட்க வேடிக்கையாக இருந்தாலும், குங்குமப்பூவில் எண்ணில் அடங்கா நன்மைகளும் உள்ளன. 

இது பல வகையான நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. இதில் உள்ள வைட்டமின் சி மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.

இது நிறத்தை அதிகப்படுத்தாவிட்டாலும், குழந்தையின் வளர்ச்சியை முழுமையடைய செய்யும், மற்றும் குழந்தைக்கு வேண்டிய அளவு சத்துகளை கொடுக்கும்.                     

ஸ்பெயின் நாட்டு பல்கலைக்கழகம் குங்குமப்பூ பார்வைத்திறனை பாதுகாக்கிறது மற்றும் விழித்திரையை சீரமைக்கிறது என கூறியுள்ளது. வயதானவர்கள் குங்குமப்பூ சாப்பிடுவதன் மூலம் பார்வைத்திறன் அதிகரிக்கும், இதற்காக குங்குமப்பூ மாத்திரைகளும் கிடைக்கின்றன. விலை அதிகமாக இருந்தாலும் அந்த அளவுக்கு இதில் நன்மைகள் உள்ளன.

  • ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு குங்குமப்பூ சிறந்த மருந்தாக விளங்கியுள்ளது. இதை பாரம்பரிய மருந்தாகவும் பயன் படுத்தி உள்ளனர்.
  • குங்குமப்பூவானது செரிமானத்தை ஊக்குவிக்கிறது, அதுமட்டுமின்றி நுரையீரல் சிகிச்சைகளிலும் , வயிற்று புண் சிகிச்சைகளிலும் பயன்படுகிறது.
  • குங்குமப்பூ தீக்காயங்களை குணப்படுத்தி, தழும்புகள் மறையவும் உதவுகிறது.
  • கர்ப்பமுற்ற பெண்கள் இத 5 மாதம் முதல் 9 மாதம் வரை சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீரடையும், பசியை தூண்டும். மேலும், சளி, காய்ச்சல் போன்றவை நெருங்காமல் இருக்கும். பிரசவ காலத்தில் ஏற்படும் இடுப்பு வலியை இது குறைக்கும்.
  • குங்குமப்பூ பாலுணர்வை தூண்ட கூடியது. விறைப்பு தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நிரந்தர தீர்வு தரக்கூடியது. இது ஆண் இனப்பெருக்க மண்டலத்தை சீர் செய்து, நீண்ட நேர படுக்கை இன்பத்தை அனுபவிக்க செய்யும் வல்லமை கொண்டது. 
  • இது அழகு சாதன பொருளாகவும் பயன்படும், குங்குமப்பூவுடன் சிறிது பன்னீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர, முகம் பொலிவு பெறும்.  அதே போல், இதை உணவில் சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும். 

இவ்வளவு மகிமை வாய்ந்த குங்குமப்பூவை நாம் இவ்வளவு நாள் தப்பாக புரிந்து கொண்டுள்ளோம். கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல அனைவரும் இதை சாப்பிடலாம். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com