நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் பாகற்காயில் உள்ள சாரன்டின் (Charantin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. அதன் விளைவாக இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை இது குறைக்கும். எப்போதும் ஒரே மாதிரி பாகற்காய் குழம்பு , பொரியல் என்பதில் இருந்து மாறுதலுக்கு பாகற்காய் சாதம் செய்து பார்க்கலாம். ஏற்கெனவே ரெடி மிக்ஸ் செய்து வைத்துக் கொண்டால் வாரநாட்களில் கூட பாகற்காய் சாதம் செய்து சமாளிக்கலாம்.

முதலில் பாகற்காய் வற்றல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.நன்கு விளைந்த , பழுக்காத பாகற்காயை தேர்ந்தெடுத்து கொள்ளவும். கசப்பை விரும்பாதவர் ஹைப்ரிட் வகை இளம் பச்சை பாகற்காயை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
பாகற்காய் வற்றல் செய்முறை:

பாகற்காயை வட்டமாக கட் செய்து, விதை நீக்கி கொள்ளவும். வெட்டிய துண்டுகளை தயிர், உப்பு கலந்து ஊற வைத்து, காய வைத்து எடுத்து டப்பாவில் வைக்கலாம். இது நாள்பட இருக்கும். கடையிலும் பாகற்காய் வற்றல் கிடைக்கும்.
பாகற்காய் சாதம் செய்முறை:
தேவையான பொருட்கள் :
பாகற்காய் வற்றல் – 50 கிராம்
மிளகாய் வற்றல் – 6
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு – தலா 2 ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
*வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் பாகற்காய் வற்றலை வறுத்து எடுக்கவும்.
*அதே வாணலியில் மிளகாய் வற்றல், பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும்.
*பாகற்காய் வற்றலில் ஏற்கெனவே உப்பு சேர்க்கப்பட் டிருக்கும் என்பதால், உப்பின் அளவை குறைத்து கொள்ளவும்.
*வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்யவும்.
* காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
*இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.
இந்த பாகற்காய் பொடி நீரிழிவு நோயாளிகளுக்கு , பித்த உடல்வாகு உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






