தினந்தோறும் பெண்கள் பயன்படுத்தக்கூடிய முக்கியமான ஆசனமாகும். இதனால் மாதவிடாய் பிரச்சனையின் போது பெண்களுக்கு உண்டாகும் இடுப்புவலி ,வயிற்று வலி பின் அதிகமாக இருக்கும் இரத்தப்போக்கையும் நீக்க உதவுகிறது.

பத்தா கோனாசனம்
செய்முறை:
தண்டாசனத்தில் உட்க்கார்ந்து,இரு முழங்கால்களையும் மடக்கியவாறு உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்துவைத்து இரு குதிகால்களையும் குத, குய்யத்தின் மத்தியில் படும்படி வைக்கவும்.
ஒன்றாக கை விரல்களை சேர்த்து உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு நேராக நிமிரவும். ஒரே நேர்க்கோட்டில் முதுகு, கழுத்து, தலை இருக்கும் நிலையில் மூச்சை சில முறை இழுத்துவிடவும். மூச்சை வெளியில் விடும்படி முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டு வந்து, தாடை தரையை தொடும்படி செய்யவும் . 30 வினாடி இந்த ஆசன நிலையில் முதல் ஒரு நிமிடங்கள் அளவு சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பின் உள்ளுக்குள் மூச்சை இழுத்தவாறு நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை இரண்டு அல்லது நான்கு முறை பயிற்சி செய்யலாம். கவனத்தை செலுத்தகூடிய இடம் : தொடைகளின் இடைப்பட்ட பகுதியிலும், மூலாதாரம் அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின்மீதும் கவனத்தை செலுத்திக்கொள்ளவும் .
பயிற்சிக் குறிப்பு: சில பயிற்சியாளருக்கு இப்பயிற்சியின்போது உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படியாமல் மேலே தூக்கிக்கொண்டு நிற்கும். அப்படி இருக்கும்நிலையில் மேலும், கீழுமாக கால்களை ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை காலை, மாலை செய்து வந்தால் கால்கள் சில நாட்களில் தரையில் படிந்து விடும். கால்கள் இரண்டும் தரையில் படிந்த பின் பொறுமையாக முன்குனிந்து எவ்வளவு வளையமுடியுமோ அந்த அளவுக்கு வளைந்து அதே நிலையில் பயிற்சியை மேற்கொள்ளவும். நாள் படப்பட வளையும் தன்மை அதிகரித்து தாடையால் தரையை தொடும் நிலை ஏற்படும்.

பயன்கள்: விரைவாதத்திற்கு பயனுள்ளது. மலட்டுத்தனம் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகளை நீக்கி சரிபடுத்தி வலுப்படுத்துகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக செயல்படுவதால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகளை தீர்க்கும். பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனமாக கருதப்படுகிறது. மாதவிடாய் பிரச்சனையின் போது ஏற்படும் இடுப்புவலியையும், வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் நீக்குகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






