கோதுமை மாவில் பாதுஷா

Wheat Badusha

மருத்துவர்களின் எச்சரிக்கை மைதாமாவில் செய்த உணவுகளை தவிருங்கள் என்பது தான். நமது விருப்பமான உணவுகளின் பட்டியல் எடுத்தால், அதில் பெரும்பாலும் மைதாமாவால் செய்தவைகளே அதிகம். மைதாமாவிற்க்கு மாற்றாக கோதுமை மாவில் செய்ய முயலும் போது , விருப்பப்பட்ட உணவை ஆரோக்கியமாக உண்கிறோம் என்ற மனத்திருப்தி.

Preparation time – 25 minutes
Cooking time – 20minutes
Category – sweet

கோதுமை பாதுஷா

Wheat Badusha
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 1/2 கப்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
கெட்டியான நெய் – 1/2 கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா – கால் டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – அரை கப்
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :
* சர்க்கரையும், தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பாகுப்பதம் வந்தவுடன் இறக்கவும்.* வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய்யைச் சேர்த்து, விரல் நுனியால் மென்மையாக, உதிரியாக ஆகும் வரை விசிறி கலக்கவும்.

* தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும்.

* இயன்றவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

* மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

* சூடான சர்க்கரைப் பாகில் நனைத்து எடுக்கவும்.

* கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.

பாதுஷாவை மெல்லிய தீயில் வேகவிடவும். தேவையெனில் ஏலக்காய் தூளை பாகில் சேர்த்து கொள்ளவும். பிரிட்ஜில் வைக்காமலே ரூம் டெம்பரேச்சரில் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.


Badusha is a famous South Indian sweet made with all purpose flour and sugar. It is a deep fried Indian festive sweet. Soft badusha once deep fried is dipped in sugar syrup to get the sweet taste. It can last around four days without refrigerating. Wheat Badusha is a healthy sweet made differently using wheat flour instead of normal badusha which is made of all purpose flour. Follow the above instructions to make delicious badusha.


scroll to top