கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த 442 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் போலீசார் இன்று காலை எடையூர் கிராமத்தில் வாகன பரிசோதனையி ல் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சென்ற சரக்கு வேனை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 442 சரக்கு மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வேனில் இருந்தவருடன் நடத்தப்பட்ட விசாரணையில் எடையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ராஜ் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






