தமிழகத்தில் ஒரே நாளில் 428 கோடி ரூபாய்க்கு மது விற்பனை – டாஸ்மாக் நிறுவனம் சாதனை!

 தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 24 ஆம் நாள் வரை முழு ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்பதால், சரக்குகளை வாங்கி விட மது பிரியர்கள் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் நெருக்கி அடித்து வாங்கி சென்றார்கள்.

கூட்டம் கூடுவதை அறிந்த டாஸ்மாக் நிர்வாகம் கடைதிறப்பு நேரத்தை நேற்று மாலை 6 மணி வரை நீட்டித்தது. பெரும்பாலான கடைகளில் சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன, இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 428 கோடியே 69 லட்ச ரூபாய்க்கு சரக்குகளை விற்று டாஸ்மாக் நிறுவனம் சாதனை படைத்தது.

சென்னையில் அதிகபட்சமாக  98 கோடியே 96 லட்சம் ரூபாய்க்கும்,சேலத்தில் 76 கோடியே 5 லட்ச ரூபாய்க்கும், மதுரையில் 97 கோடியே 62 லட்ச ரூபாய்க்கும், கோவையில் 67 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கும் சரக்குகள் விற்பனையாகி உள்ளன.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course