தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் அனுமதிக்கப்படுபவை??

தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று, நாளை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து விதமான கடைகளும் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் மளிகை, இறைச்சி, தேநீர், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், பூ மற்றும் காய்கறி விற்பனைகள் ஆகியவைக்கு 12 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி, தமிழக அரசு சார்ந்த துறைகளில் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.
  • பெட்ரோல்,  டீசல் பங்குகள் முழு நேரமும் இயங்கும் 
  • வேலைவாய்ப்பு, நேர்முக தேர்வு, திருமணம் ஆகிவையில் பங்கேற்பார்கள் உரிய ஆவணங்களுக்கு கீழ் அனுமதிக்கப்படுவர்.
  • வங்கிகள் மற்றும் காப்பீட்டு மையங்கள் ஆகியவை 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
  • மருத்துவமனைக்கு செல்பவர்கள்  உரிய ஆவணத்துடன் செல்ல அனுமதிக்கப்படுவர்.
  • மேலும் இறுதி சடங்குகளில் 20 நபர்களும், திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களும் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course