இன்றைய ராசிபலன் 09-05-2021

மேஷம்:

வீண் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலை சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  

பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை திருப்பி தருவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் முக்கிய  விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

மிதுனம்:

 நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1, 2, 7.

கடகம்:

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 5.

சிம்மம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு சில விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள்.  வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

கன்னி:

சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.     

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:  1, 3, 5, 9.

துலாம்:

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருக்கியவர்களுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து  முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7.

விருச்சிகம்:

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் நெளிவு சுளிவுகள் ஏற்படும். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 5.

தனுசு:

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்னை நீங்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்: 3, 6, 9.

மகரம்:

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில்  மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:   1, 3, 5, 9.

கும்பம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தை  பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:  1, 3, 9.

மீனம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். நீங்கள் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com