ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்! 

தமிழ்நாட்டிற்கு  போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்களை மத்திய அரசு தாமதிக்காமல் உடனே வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு  வலியுறுத்தியுள்ளார்.  தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆக்சிஜன்  840 மெட்ரிக் டன்னாக தேவைப்படும் நிலையில் தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் கீழ் 220 மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கீடு செய்தது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தமிழகத்தில் தென்படும் இந்த நெருக்கடி சூழலில் மத்திய அரசு உடனே தலையிட்டு தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்க வேண்டும் என்று கடிதத்தில் மூலம் வேண்டுகோள் விதித்துள்ளார். 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும்  ஆக்ஸிஜனை கொண்டு வருவதற்கு தமிழகத்திற்கு ரயில்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com