இயக்குனர் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை நேற்று இரவு காலமானார்.

இயக்குனர், இசையமைப்பாளர்,  பாடலாசிரியருமான கங்கை அமரனின் மனைவியும் இயக்குனர் வெங்கட் பிரபு,நடிகர் பிரேம்ஜி ஆகியோரின் தாயாருமான மணிமேகலை கங்கை அமரன் நேற்று இரவு 11.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் சான்றளித்து உள்ளனர். அவரது உடலானது காலை 11.30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. மறைந்த மணிமேகலை அவர்களுக்கு வயது 69.

கங்கை அமரனின் மனைவி மணிமேகலை அவர்கள் மறைவை அடுத்து நடிகர் ஜெய், இயக்குனர் சமுத்திரக்கனி, மாஸ்டர் சில்வா ஆகியோர் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். மேலும் பல  திரையுலகினர் கங்கை அமரனின்  குடும்பத்தை  நேரிலும், தொலைபேசியிலும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top