வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பார்த்து செவிகளில் கேட்க முடியாத ஆபாச வார்த்தைகளால் அவதூறு செய்த ஒரு குடிகார பொறுக்கியின் அத்துமீறல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த இரவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வயிறு முட்ட குடித்து விட்டு வந்த குடிமகன் முன்களப் பணியாளர்கள் காவல்துறையினரை பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவர்களை அவமானப்படுத்தினான். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எங்களை ஒன்றுமே செய்ய முடியாது எனவும் அவன் திமிரோடு எச்சரிக்கை வைத்துவிட்டு சென்றான்.

இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்த போது ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த அந்த குடிகாரன் காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடன் என்பதும் இவன் வழக்கறிஞர் என கூறியதாகவும் தெரிவித்தனர். இந்த மாதிரி அநாகரிகமாக நடந்து கொண்ட பிறகும் அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






