கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உடற்கூராய்வு செய்யப்பட்ட பெண்ணின் உடலை தகன மேடையில் வீசிச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் யாசகம் செய்து வந்த பெண் ஒருவர் சாலையை கடக்கும் போது வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த பெண்ணுடன் யாசகம் செய்து வந்த ஒருவர், அந்த பெண்ணின் உடலை பெற்றுக் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அரசமங்கலம் காலனிக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அங்கிருந்த ஊர் பொதுமக்கள் கொரோனா தொற்றால் உயிர் இழந்திருக்கலாம் என்ற அச்சத்தில் உடலை ஊருக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அங்கும் பிணவறையில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இறந்த பெண்ணின் உடலை கெடலம் நதிக்கரை பாலம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான மின்சார தகன மேடையில் வீசிச்சென்றார். இந்த நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






