மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு – உயர்நீதிமன்றம் பரிந்துரை

மே 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தேதிகளிலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. மே 2 ஆம் தேதி முழு ஊரடங்கின் போது  வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய பணிகள் மட்டும் அனுமதிக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மே 1 மற்றும் 2 ஆம்  தேதிகளில் முழு ஊரடங்கை எவ்வித சமரசமும்  இன்றி நடைமுறை படுத்தலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு ஒன்று விசாரித்து வருகிறது. மேலும் தமிழகம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது அதற்கு முந்தைய தினமான மே 1 ஆம் தேதியும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இதற்கான அரசனை வரும் 28 ஆம் தேதி அரசு பிறப்பிக்கலாம் எனவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது .

மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருப்போருக்கு வந்து செல்ல வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். வாக்கு எண்ணிக்கை அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எவ்வித சமரசமும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course