இன்றைய ராசிபலன் 27-04-2021

மேஷம்:

 உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

 

ரிஷபம்:  

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3,9.

மிதுனம்:

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, அடர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 4, 6.

கடகம்:

 அரசு அதிகாரி உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.  புது வேலை கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

சிம்மம்:

 தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3,7.

கன்னி:

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில்  அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1, 7.

துலாம்:

 ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறு  விதமாக புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்:4, 5.

விருச்சிகம்:

 ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆநீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:5.

தனுசு:

 எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, அடர் நீலம்; அதிர்ஷ்ட எண்: 2,3.

மகரம்:

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆர்வமாக ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மைகள் நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெளிர் மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:3,9.

கும்பம்:

கடந்த இரண்டு நாட்களாக இருந்த கூச்சல், குழப்பம் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விசேஷங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில்  உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:2,5,7.

மீனம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 6, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com