இன்றைய ராசிபலன் 26-04-2021

மேஷம்:

பணப்புழக்கம் அதிகரிக்கும்.  உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, மனை வாங்குவது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

 

ரிஷபம்:  

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.

மிதுனம்:

 எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9.

கடகம்:

 புதிய முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். அரசு காரியங்கள் வெற்றி அடையும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

சிம்மம்:

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். அவசரத்துக்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மனதில் திருப்தி உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்:6,9.

கன்னி:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.வேலைச்சுமை அதிகரிக்கும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:2, 7.

துலாம்:

எளிதாக முடிய வேண்டிய காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 5.

விருச்சிகம்:

 உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மரியாதை கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9.

தனுசு:

உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியில் வெற்றி பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெளிர் நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்: 4, 6.

மகரம்:

 கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடியும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தேவை பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:3,5.

கும்பம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்; அதிர்ஷ்ட எண்கள்:2, 6.

மீனம்:

மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு.  சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, வெளிர் பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:  1, 5, 6.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course