சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவர் தனக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு உயர் மின் அழுத்த இணைப்பை புதுப்பிக்க அம்பத்தூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து சுப்பையாவிடம் அம்பத்தூர் கோட்ட மின்வாரிய ஆய்வாளர் தேனப்பன் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு நாளை வந்து தருவதாக கூறிவிட்டு சென்ற சுப்பையா ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி சுப்பையா 10 ஆயிரத்தை எடுத்து சென்று மின்வாரிய ஆய்வாளர் தேனப்பனிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் தேனப்பனை கையும் களவுமாக கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. ஆன்லைன் மூலம் விளையாட்டு மோகத்தால் தந்தையிடம் ரூபாய் 12 லட்சம் திருடிய சிறுவன் வழக்கை நேற்று விசாரித்த நீதிபதியே தேனப்பனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






