கொரோனா கட்டுப்பாடுகளால் மது பிரியர்களுக்கு ஏற்பட்ட கால நெருக்கடி

தமிழகத்தில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுவதால் டாஸ்மாக் கடைகளை காலையில் திறந்து காய்கறி கடைகளை போல் பகல் 12 மணிக்கு மூடுவதென அரசு முடிவெடுத்துள்ளது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களை போல் தமிழகத்தில் கொரோனா பரவல் மிக மோசமாகி விடக்கூடாது என்பதற்காக நாளை முதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பால் மற்றும் மருந்து கடைகள் தவிர காய்கறி, இறைச்சி, மளிகை, தேநீர் உள்ளிட்ட அனைத்து சிறு கடைகளுக்கும் பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையும் பார்சல்கள் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பகல் 12 மணிக்கு அனைத்து கடைகளையும் மூடி விட்டு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைத்தால் கடுமையான கண்டனங்கள் எழும்.

சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதற்காக குடி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top