அம்மா உணவகத்தின் விலைப்பட்டியல் மற்றும் பெயர் பலகையை சூறையாடிய தி.மு.க வினர்

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையை உடைத்தெறிந்த தி.மு.க வினர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையை தி.மு.க வினர் உடைத்தெறிவதாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்ரமணியன் பெயர் பலகையை உடைத்தெறிந்த நவ சுந்தர், சுரேந்திரன் ஆகியோர் தி.மு.கவில் எந்த பொறுப்பிலும் இல்லாத சாதாரண உறுப்பினர்கள் எனவும், அவர்கள் தி.மு.க தலைவர் உத்தரவுடன் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு கேடு விளைவிக்கும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். கிழித்தெறியப்பட்ட விலை பட்டியல் மற்றும் பெயர் பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளதாகவும், தி.மு.க பெயரை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறிய மா. சுப்ரமணியன் சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தபடி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று மா. சுப்ரமணியன் கூறினார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top