இன்றைய ராசிபலன் 05-05-2021

மேஷம்:

எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.புதிய முயற்சி சாதகமாகும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

ரிஷபம்:  

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்படும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனையும் சுமாராகத்தான் இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3,9.

மிதுனம்:

எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும் . மற்றவர்களால் மறை முகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எது வும் இருக்காது. குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் சுமாராகத்தான் இருக் கும். 

அதிர்ஷ்ட நிறம்:நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 5.

கடகம்:

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக நடக்கும் .  சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

சிம்மம்:

உறவினர்கள் உதவியுடன் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் வழக்கம்போல இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:2, 7.

கன்னி:

தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்

அதிர்ஷ்ட நிறம்:நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:2, 9.

துலாம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை சற்று குறைவாகத்தான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:3, 9.

விருச்சிகம்:

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.  நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, அடர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 4, 6.

தனுசு:

சாதிக்கும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்: 5,6.

மகரம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற வெளியில் அலைய வேண்டிவரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 7.

கும்பம்:

கணவன்-மனைவிக்குள்  ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். சக பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 9.

மீனம்:

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு எதிர்பார்த்த நற்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:3,9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course