உணவு மற்றும் சத்து மாத்திரைகள் சரிவர வழங்காததால் கொரோனா நோயாளிகள் போராட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் உணவு மற்றும் சத்து மாத்திரைகள் சரிவர வழங்காததை கண்டித்து கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேலூர் புற வழி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உணவு தாமதமாக வழங்கப்படுவதாக கொரோனா நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நோயெதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகளை முறையாக வழங்குவது கிடையாது என்றும் கழிவறையில் போதுமான தண்ணீர் வசதியும் இல்லை என்றும் குற்றம் சாட்டி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ள 50 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இன்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் நோயாளிகளுடன் பேசி குறித்த நேரத்தில் உணவு வழங்கப்படும் என்றும், கழிவறை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top