இன்றைய ராசிபலன் 06-05-2021

மேஷம்:

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகு படுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.

ரிஷபம்:  

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள்.  உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

மிதுனம்:

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். தெய்வீக வழிபாடு அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 7.

கடகம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, பச்சை, ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்:1, 7.

சிம்மம்:

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதரவகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார பொருட்கள் வாங்குவீர்கள்.  தாய் வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்:4, 5.

கன்னி:

சமயோசிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் நன்மையும், எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும் . அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:  5.

துலாம்:

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு, அடர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 3.

விருச்சிகம்:

 முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.  தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெளிர் மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள் 3, 9.

தனுசு:

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.  வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்:2, 5, 7.

மகரம்:

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.  புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். தடைகள் உடைபடும் நாள் .

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:  3, 6, 9.

கும்பம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் அதிகமாகும்.  நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.  அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

மீனம்:

 கணவன் மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும்.  ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். சகோதர வகையில் மனஸ்தாபங்கள்  வந்து நீங்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் . வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top