கஞ்சா பொட்டலத்துடன் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள்…

485 கிராம் கஞ்சாவுடன் மேட்டுப்பாளையத்தில் வளம் வந்த இளைஞரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் தர்மபுரி பொது கழிப்பிடம் அருகே இருந்த இரண்டு இளைஞர்களை விசாரிக்க முயன்ற போது போலீசாரை கண்டு பயந்து ஓடினர்.

 

அப்போது காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் மூங்குளம் பெரம்பை சாலையை சேர்ந்த கார்த்திகேயன்(22), தர்மபுரி குருதேவன்(22), ஆகியோர் என்பது தெரியவந்தது.

 அவர்களிடத்தில் சின்ன சின்ன பொட்டலங்காக 485 கிராம் கஞ்சா இருந்தது அதனை போலீசார் கைப்பற்றினர். மேலும், இருவரையும் கைது செய்து கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

 

scroll to top