பிரச்சாரத்தில் திமுகவை விமர்சித்த டிடிவி..

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பொன் ராஜாவை ஆதரித்து டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணி. எங்களை கைநீட்டி யாரும் குற்றம் சொல்ல முடியாது. மற்ற கூட்டணி பண மூட்டையுடன் நிற்கிறது.

 

மேலும்,திமுக ஆட்சிக்கு வந்தால் மாவட்ட செயலாளர் தான் காவல் ஆய்வாளராக இருப்பார்கள். திமுக தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் எல்லாருமே ஆந்திராவுக்கு செல்ல வேண்டியதுதான் என டிடிவி தினகரன் விமர்சித்தார். மேலும், திமுகவை எதிர்த்து எங்கள் பிரச்சாரம் இருக்கும் என கூறினார். மற்ற கட்சிகளை போல் மாதந்தோறும் பணம் கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்ற மாட்டேன். ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course