ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நகைக்கடை உரிமையாளருக்கு தெரியாமல் 5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க நகைகள், 4 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக கொள்ளையடித்த ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். விஜயவாடாவில் உள்ள கவர்னர் பேட்டை பகுதியில் தங்க நகை கடை நடத்தி வருபவர் மகாவீர் ஜெயின். இவரது கடையில் கடந்த 6 வருடங்களாக வேலை பார்த்து வந்த வெங்கட ஹரிஷ் என்பவர் கடை உரிமையாளரின் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனை பயன்படுத்தி கடந்த மாதம் 28 ம் நாள் கடையின் உரிமையாளர் இல்லாத போது, உரிமையாளரின் வீட்டிற்கு சென்று கடைக்கு தேவை என 10 கிலோ தங்கத்தை எடுத்துக் கொண்டு கடைக்கு செல்லாமல் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கடையில் இருந்த காசோலை ஒன்றையும் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனை வைத்து கடந்த மாதம் 29 ஆம் நாள் தனியார் வங்கியில் 4,60,000 ரூபாயை தனது சொந்த கணக்கில் மாற்றியுள்ளார். இந்த நிலையில் மகாவீர் ஜெயின் அளித்த புகாரை அடுத்து வெங்கட ஹரிஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகளையும், 4,60,000 ரூபாய் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






