அ.தி.மு.க இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் போடி தொகுதியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி சண்முகம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி சண்முகநாதன், மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 171 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
