புரெவி புயலால் கனமழை பெய்து வருகிறது – வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை

புரெவி புயல் காரணமாக தென்தமிழகமெங்கும் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 19 செ.மீ., தலைஞாயிறில் 14 செ.மீ. மழை பதிவானது.

வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Puravi Cyclone Effect

மேலும், திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது, இந்த புயலின் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழையும் தலைஞாயிறில் 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., குடவாசலில் 10 செ.மீ., திருவாரூரில் 9 செ.மீ., நன்னிலத்தில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 12 செ.மீ., தங்கச்சிமடத்தில் 8 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ. மழை பதிவானது.

scroll to top