அந்த சிகிரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டைலிஷாக இருப்பீர்கள் – அன்புமணி ராமதாஸ்

நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் “சர்க்கார்” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகியிருந்தது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இது வெளியிடப்பட்டிருந்தது. இயக்குனர் முருகதாஸ் அவர்கள் இயக்கவிருக்கும் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை அப்படக்குழுவினர் வெளியிட்ட பின்பு, ரசிகர்கள் இதனை வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜயின் சமீபத்திய படங்கள், ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறது அல்லது இப்படி ஏற்படும் சர்ச்சை அந்த படத்தின் வசூலுக்கு காரணமாககூட அமைந்துவிடுகிறது.

“சர்க்கார்” படத்தின் போஸ்டர் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த பஸ்ட் லுக் போஸ்டரில் “வாயில் சிகரெட்டோடு படு இளமையாக, ஸ்டைலிஷாக இருக்கிறார் விஜய். அதில் கருப்பு நிற உடையுடன் காட்சியளிக்கும் நடிகர் விஜய் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார், பின்புறத்தில் ஒரு நகரம் காட்டப்படுகிறது.

Images of Vijay in Sarkar

இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் யின் போஸ்டரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

Dr. Anbumani Ramadoss

“வரவிருக்கும் தனது படத்தில், புகைபிடிப்பதை ஊக்குவித்து பர்ஸ்ட்லுக் வெளியிட்டிருப்பது அவமானத்திற்குரியது.

அந்த சிகிரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் அழகாக இருப்பீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஒரு படத்தின் கதையோ அல்லது வசனமோதான் சர்ச்சையாகும், ஆனால் “சர்க்கார்” படத்தின் முதல் போஸ்டரே இப்படி ஒரு விமர்சனத்தை வாங்கியுள்ளது.

தான் புகைபிடிப்பது போல் இனிமேல் நடிக்கமாட்டேன் என்று முன்பு ஒருமுறை விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course