நிருபர் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம் . – நிருபர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்  வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், படுகொலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,சமூக விரோத கும்பலால் செய்தியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோத கும்பலுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பதாகவும்,பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதாகவும், இது ஜனநாயகத்தின் மீது விழும் சம்மட்டி அடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
TV Reporter Killed in Tamilnadu

தனியார் தொலைக்காட்சி நிருபர்  இரவு வீட்டின் வெளியே செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரின் தந்தை நிருபரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அங்கு நிலவிய கஞ்சா வியாபாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து அவர் செய்தி வெளியிட்டுள்ளார், இதன் காரணமாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது , இதனையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நிருபர் உயிரிழந்தற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் சங்கம்,கோவை பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த செய்தியாளர் மோசஸின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தியுள்ளது.

scroll to top