கடையை திறந்து வைத்ததாக இளைஞரின் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்! 

ஊரடங்கு காலத்தில் கடையை திறந்து வைத்ததாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் மஞ்சுஷா விக்ராந்த் ராய் என்பவர்  இளைஞரை தாக்கிய  நிகழ்வு சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் சிஜாப்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி ஷூ கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை மற்றும் மகனுடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் மாவட்ட ஆட்சியர் மஞ்சுஷா விக்ராந்த் ராய் என்பவர்  இளைஞரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் இதே சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் இளைஞரின் செல்போன் உடைத்து கன்னத்தில் அறையும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top