சி.பி.எஸ்.இ. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ. மற்றும் பல மாநில கல்வி வாரியங்கள் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதுபோல, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பிளஸ்-2 தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தது. latest tamil newsஇந்நிலையில், பிளஸ் 2 தேர்வு மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து,  நேற்று காணொலி காட்சி வழியாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள், செயலர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தியது.  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜாவேத்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

latest tamil newsஇதனை தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சி.பி.எஸ்.இ. மற்றும் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. இந்த கூட்டத்தில் பயனுள்ள கருத்துகள் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. மேலும், மாநில அரசுகள் தங்களது கருத்துகளை வரும் 25ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.


பிளஸ்-2 தேர்வு தொடர்பாக அனைவரின் முழு ஒத்துழைப்புடன் விரைவாக முடிவு எடுப்பதுடன், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நிலவும் நிச்சயமற்ற தன்மையை போக்கும் வகையில், அவர்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நலன் மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course