கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,194 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு 4,194 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மட்டும் 2 லட்சத்து 95,525 பேர் கொரோனாவுக்கு  உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 57,630 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை இந்தியாவில் 2 கோடியே 30 லட்சத்து 70,365 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2 லட்சத்து 57,299 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை 2 கோடியே 62 லட்சத்து 89,290 பேருக்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது 29 லட்சத்து 23,400 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது வரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர்  87.25%  சதவீதமாகவும், உயிரிழப்பு 1.12 %  சதவீதமாகவும் உள்ளது. மேலும் இந்தியாவில்  19 கோடியே 33 லட்சத்து 72,819 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women