மும்பை அருகே கப்பல் மூழ்கி 60 பேர் பலி – பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

அரபிக்கடலில் உருவான ‘டவ்-தே’ புயல் கடந்த திங்கட்கிழமை கரையை கடந்தது. மும்பையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணறு பணிக்காக நின்ற கப்பல் புயலின் போது கடலில் மூழ்கியது.
 
37 killed, 38 missing, 186 rescued aboard ship in Arabian Sea
 

இந்த விபத்துகளில் 274 பேர் நடுக்கடலில் சிக்கி தத்தளித்தனர். அவர்களில் 188 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டனர். உயிரிழந்த 60 பேரின் உடல்களையும் கண்டெடுத்தனர். மற்றவர்களை மீட்கும் பணியில்  கடலோர காவல் படை, கடற்படை, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் இரவு, பகலாக ஈடுபட்டது. உயிர் தப்பிய தலைமை பொறியாளர் ரகுமான் ஷேக் அளித்த புகாரின் அடிப்படையில் கப்பலின் கேப்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tragedy at Arabian Sea: 22 dead, 65 missing from barge; 186 rescued

 
நேற்று 5-வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. மற்ற 26 பேரை தேடும் பணி தொடந்து நடந்து வருகிறது. ஆப்கான்ஸ் என்ற நிறுவனம் கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஊழியர்களின் பணி தகுதிக்கு ஏற்ப தலா ரூ.35 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course