மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவரின் உடலை குப்பை வண்டிகள் தூக்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தேவாஸ் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 21 வயது இளைஞரின் உடலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் குப்பையைக் கொட்டுவது போல குப்பை வண்டியில் தூக்கிப் போடும் காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன.
இந்த சம்பவம் சனிக்கிழமை சோன்காட்ச் நகரில் நடந்தது,ரோலுபிபாலியா கிராமத்தில் வசிப்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் இந்த உடல் உரிமை கோரப்படாததால் சனிக்கிழமை குப்பை வாகனத்தில் அனுப்பப்பட்டதாகவும் சோன்காட்ச் நகராட்சியின் தலைமை நகராட்சி அதிகாரி ரவி பட் தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகளின் உடலை இரக்கமின்றி கையாளும் செயல்கள் தொடர்கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






